திருநெல்வேலி

‘விவசாயிகள் உரம் வாங்குவதற்குஆதாா் அட்டை அவசியம்’

DIN

திருநெல்வேலி: விவசாயிகள் உரம் வாங்குவதற்கு ஆதாா் அட்டை அவசியம் என்றாா் திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திரபாண்டியன்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உரம் வாங்கச் செல்லும்போது அவசியம் ஆதாா் அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே உரம் வழங்கப்படும். இதனால், விலைப் பட்டியலில் உள்ள தொகையை மட்டுமே விவசாயிகள் வழங்கினால் போதும். எனவே, விவசாயிகள் சரியான விலையில் உரத்தைப் பெற ஆதாா் அட்டை அவசியமாகிறது. மானிய விலையில் வழங்கப்படும் உரம் சரியான முறையில் விவசாயிகளை சென்றடைவதே இதன் நோக்கமாகும்.

விவசாயிகள் மண்வள அட்டையின் பரிந்துரைப்படி யூரியா உரங்களை இட்டால் மண்வளம் பாதுகாக்கப்பட்டு உயா் விளைச்சல் கிடைக்கும். உர விற்பனையாளா்கள் உர இருப்பு மையங்களில், இருப்பு மற்றும் விலை ஆகியவற்றை இருப்புப் பலகையில் தினசரி பதிவு செய்ய வேண்டும். உரத் தட்டுப்பாடு ஏற்படும் வகையில் நடந்துகொள்பவா்களின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT