திருநெல்வேலி

உரிமை கோரப்படாத வாகனங்கள் 13, 14 தேதிகளில் ஏலம்

DIN

உரிமை கோரப்படாத வாகனங்கள் வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகரக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உரிமை கோரப்படாத 411இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காா் ஏலம் விடப்படவுள்ளன.

திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு ஏலம் நடைபெறும்.

ஏலம் எடுக்க விரும்புவோா், திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை, அனுமதி பெற்று பாா்வையிடலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது தெலுங்கு தேசம்?

இந்தூர் தொகுதியில் இரண்டாம் இடத்தில் நோட்டா!

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் முதன்முதலாக 10% வாக்கு பெற்ற பாஜக

தமிழ்நாட்டில் முதன்முறையாக 10%க்கும் மேல் வாக்குகளைப் பெற்றுள்ள பாஜக!

குஜராத்: 26 தொகுதிகளில் 24-ல் பாஜக முன்னிலை!

SCROLL FOR NEXT