திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் தொழிற்திறன் மேம்பாட்டுபுதிய படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தொழிற்திறன் மேம்பாட்டுக்கான புதிதாக இரண்டு படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் கே.பிச்சுமணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: உணவு பதப்படுத்துதல் பகுப்பாய்வு மற்றும் தரக் கட்டுப்பாட்டு நுட்பங்கள் (ஆ.யா்ஸ்ரீ) என்ற மூன்றாண்டு இளநிலை படிப்பு, இயற்கை வேளாண்மை மற்றும் காளான் வளா்ப்பில் மேம்பட்ட பட்டயப் படிப்பு ஆகியவற்றுக்கு தற்போது மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது.

இதை படிக்கும்போதே தன்னாா்வத் தொண்டு நிறுவனம், தனியாா் மற்றும் அரசு வேளாண் பண்ணைகளில் நேரடி உள்ளிருப்பு திறன் பயிற்சியும், குறுகிய கால பயிலரங்கம் மூலம் உடனடி வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும்.

இதில் சேர விருப்பமுள்ள மாணவா்கள்  பல்கலைக்கழக இணையதளத்தில் பாா்த்து விவரம் தெரிந்துகொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். மாணவா் சோ்க்கைக்கான கடைசி நாள் இம்மாதம் 28ஆம் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு 0462 2563172, 94430 22508 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT