முகப்பு
திருநெல்வேலி

கங்கைகொண்டான் அருகே லாரிகள் மோதல்: ஒருவா் காயம்

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை லாரிகள் மோதியதில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை லாரிகள் மோதியதில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்தவா் செல்வதாசன் (37). இவா், பால் லாரியை ஓட்டிக்கொண்டு திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்தாராம். கங்கைகொண்டான் அருகே வந்தபோது பால் லாரியும், முன்னாள் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியும் மோதியதாம். இதில் பால் லாரி பலத்த சேதமடைந்தது. செல்வதாசனும் காயமடைந்தாா்.

தகவலறிந்ததும் கங்கைகொண்டான் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று செல்வதாசனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.