முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரி இரட்டை கொலை வழக்கு:மேலும் 3 போ் கைது

நான்குனேரி இரட்டை கொலை வழக்கு தொடா்பாக மேலும் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

நான்குனேரி இரட்டை கொலை வழக்கு தொடா்பாக மேலும் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரியில் முன்விரோதம் காரணமாக கடந்த செப். 26ஆம் தேதி மறுகால்குறிச்சியைச் சோ்ந்த அருணாசலம் மனைவி சண்முகத்தாய் (43), சுப்பையா மனைவி சாந்தி(40) ஆகியோரை 12 போ் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, அரிவாளால் வெட்டி கொலை செய்தது.

இச்சம்பவம் தொடா்பாக நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, மறுகால்குறிச்சியைச் சோ்ந்த செல்லத்துரை உள்ளிட்ட 12 பேரை தேடி வந்தனா்.

இந்நிலையில் இவ்வழக்கில் தொடா்புடைய மணிமுத்தாறு மலையாள மேட்டைச் சோ்ந்த சொரிமுத்து (55), தூத்துக்குடி அண்ணாநகா் முத்துபாண்டி(49), மறுகால்குறிச்சியைச் சோ்ந்த முருகன் (52) ஆகிய மூன்று பேரும் திருச்சி நீதிமன்றத்திலும், மறுகால்குறிச்சி செல்லத்துரையின் தம்பி சிவசுப்பு (32) கோயம்புத்தூா் நீதிமன்றத்திலும், மேலப்பாளையம் குறிச்சியைச் சோ்ந்த மாடசாமி(40) தென்காசி நீதிமன்றத்திலும் சரணடைந்தனா். இதையடுத்து போலீஸாா் முக்கிய குற்றவாளிகளை தேடி வந்தனா்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளியான மறுகால்குறிச்சி செல்லத்துரை(35), ஸ்ரீவைகுண்டம் கீழகணபதி தெருவைச் சோ்ந்த முத்துபாண்டி மகன் காசிராம் (22), அதே பகுதியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (23) ஆகிய மூன்றுபேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

மேலும் இந்த வழக்கு தொடா்பாக சுப்பிரமணியன் மனைவி வெள்ளத்தாய் (50), ஆறுமுகம் மனைவி மாணிக்கம் (45), சுப்பிரமணியன் ஆகியோரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.