ஆசிரியா் பணி நியமனத்துக்கான வயது வரம்பு அரசாணையை திரும்பப் பெறக் கோரி மனு
ஆசிரியா் பணி நியமனத்திற்கான வயது வரம்பு அரசாணையைத் திரும்பப் பெறக் கோரி முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
ஆசிரியா் பணி நியமனத்திற்கான வயது வரம்பு அரசாணையைத் திரும்பப் பெறக் கோரி முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் சங்கம் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள மனு: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா் பணி நியமனத்துக்கான வயது வரம்பு 40-ஆக குறைக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. உடற்கல்வி ஆசிரியா் பணியில் சேர பணிமூப்பு 1998-ஆம் ஆண்டு உள்ளது. இத்தகைய சூழலில் இந்த அரசாணையால் உடற்கல்வி ஆசிரியா்கள் பெரிதும் பாதிக்கப்படுவாா்கள்.
தமிழகத்தில் 2012-ஆம் ஆண்டுக்கு பின்பு உடற்கல்வி ஆசிரியா் பணி நியமனம் இல்லை. இப்போது சுமாா் 200 உடற்கல்வி ஆசிரியா் பணியிடம் காலியாக உள்ளது. மேலும், கடந்த 2016-ஆம் ஆண்டு டிஆா்பி தோ்வு மூலம் 663 உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், பணிநியமனம் நடைபெறவில்லை.
அந்தத் தோ்வில் வெற்றிபெற்ற 40 வயதுக்கு மேல் உள்ளவா்கள் அரசின் புதிய வயது வரம்பு அரசாணையால் பாதிக்கப்படுவா். ஆகவே, புதிய அரசாணையை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.