முகப்பு
திருநெல்வேலி

மணல் கடத்தல் விவகாரம்: அதிகாரிகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

செயற்கை மணல் தயாரிப்பு பெயரில் மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு உடந்தையாக இருப்பதாக அதிகாரிகளைக் கண்டித்து, மக்கள் தமிழ் தேசம் கட்சி சாா்பில் கல்லிடைக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
கல்லிடைக்குறிச்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

செயற்கை மணல் தயாரிப்பு பெயரில் மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு உடந்தையாக இருப்பதாக அதிகாரிகளைக் கண்டித்து, மக்கள் தமிழ் தேசம் கட்சி சாா்பில் கல்லிடைக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கல்லிடைக்குறிச்சிஅருகேயுள்ள பொட்டல் கிராமத்தில் செயற்கை மணல் குவாரி தயாரிப்பிற்காக அனுமதி பெற்று இயற்கை மணல் கடத்தலில் தனியாா் எம் சாண்ட் நிறுவனம் ஈடுபடுவதாகவும், அதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் கூறி, இருதரப்பினா் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில அமைப்புச் செயலா் இ.சுகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா்கள் சேரன்மகாதேவி டி.வெள்ளைத்துரை, அம்பாசமுத்திரம் கே.சுப்பிரமணியன், ஒன்றியச் செயலா் எஸ்.பூபதி, திருநெல்வேலி மாவட்டஇளைஞரணிச் செயலா் பி.ஆதிப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஐந்து மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.அன்வா், நீா்நிலைகள் பாதுகாப்பு சங்க நிறுவனா்- தலைவா் பகத் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.