முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் இந்திய கம்யூ. கட்சியினர் மறியல்

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 38 பேரை காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் திங்கள்கிழமை சாலைமறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.
பகிர்:

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 38 பேரை காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். 

கரோனா பொதுமுடக்க காலத்தில் பெருநிறுவனங்களுக்கு உதவும் வகையிலும், விவசாயிகளுக்கு பேரிழப்பை அளிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ள மத்திய அரசைக் கண்டிப்பது, தொழிலாளர் நலச்சட்டங்களில் திருத்தம் செய்திருப்பதை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருநெல்வேலியில் வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.காசிவிஸ்வநாதன் தலைமையில் கட்சியினர் திரண்டனர். மாவட்ட துணைச் செயலர் செ.லட்சுமணன், மாநகரச் செயலர் எஸ்.நல்லதம்மபி, ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலர் என்.உலகநாதன், மின்வாரிய ஏஐடியுசி செயலர் கே.கே.பெருமாள்சாமி உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டக்குழுவினர் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸôர் அவர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற 8 பெண்கள் உள்பட மொத்தம் 38 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →