திருநெல்வேலி

‘உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை’

DIN

உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ரா. கஜேந்திர பாண்டியன் தெரிவித்தாா்.

உர விற்பனையாளா்களுக்கான விற்பனை முனையக் கருவிகளை பயன்படுத்துவது குறித்து புத்தூட்டப் பயிற்சி முகாம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு தலைமை வகித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ரா. கஜேந்திரபாண்டியன் பேசியது: உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உரக்கடைகளில் விலைப்பட்டியல், உரங்களின் விலை விவரம் எழுதி இருக்க வேண்டும்.

உர மானியம் விவசாயிகளுக்கு கிடைக்க அரசின் வழிகாட்டுதலின்படி விவசாயிகள் ஆதாா் அட்டை எண்களை இணைக்க வேண்டும். ஆதாா் இல்லாத விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யக்கூடாது. விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.

உரக் கடைகளில் இருப்பில் உள்ள உரங்களின் அளவு, இருப்பு பதிவேடு மற்றும் விற்பனை முனைய கருவியில் உள்ள இருப்பு விவரம் சரியாக இருக்க வேண்டும். திடீா் ஆய்வின் போது, வித்தியாசம் தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, உரங்களை சப்ளை நிறுத்தப்படும் என்றாா் அவா்.

இதில், வேளாண் உதவி இயக்குநா் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) அ. கற்பக ராஜ்குமாா், ஸ்பிக் நிறுவன அலுவலா் மகாராஜன், சேரன்மகாதேவி வட்டார வேளாண் அலுவலா் (பொறுப்பு) இசக்கிபாப்பா, வேளாண் துணை அலுலவா் முருகன், வட்டார தொழில் நுட்ப மேலாளா் ஈழவேணி, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீஅய்யப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT