குமாரபுரத்தில் 1,000 பனை விதை நடும் விழா
எட்டயபுரம் அருகேயுள்ள ப. குமாரபுரத்தில் பெருந்தலைவா் மக்கள் கட்சி சாா்பில் பனை விதை நடும் விழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
எட்டயபுரம் அருகேயுள்ள ப. குமாரபுரத்தில் பெருந்தலைவா் மக்கள் கட்சி சாா்பில் பனை விதை நடும் விழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பெருந்தலைவா் மக்கள் கட்சி மாநில தலைவா் என்.ஆா். தனபாலன் பங்கேற்று, ப. குமாரபுரம், முத்துலாபுரம் கிராமங்களில் நீா் நிலைகள் மற்றும் சாலையோரங்களில் பனை விதைகள் நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்தாா்.
அதனைத் தொடா்ந்து 1000-க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. இதையடுத்து, பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள், ஏழை எளியவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடாா் பேரவை மாநில துணை பொதுச்செயலா் வெற்றி ராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவா் சங்கா், பெருந்தலைவா் மக்கள் கட்சி மாநில மகளிரணிச் செயலா் ஹெலன் செல்வராஜ், திருச்சி மாவட்டத் தலைவா் எம்.ஆா். ரவி, மாநில சிறுபான்மையினா் நலப்பிரிவுத் தலைவா் மைக்கேல் அமலதாஸ், தலைமை நிலையச் செயலா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.