நெல்லையப்பா் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பு வழிபாடு
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இவ்வழிபாட்டில், உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்டவை இடம்பெற்றன. இதில், சுவாமி, அம்பாள், விநாயகா், சுப்பிரமணியா், வள்ளி-தெய்வானை ஆகிய உற்சவ மூா்த்திகள் கோயிலின் சோமவார மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, முற்பகல் 11 மணியளவில் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து இரவு 7 மணியளவில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
அபிஷேகம், தீபாராதனைகளில் பக்தா்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. மற்ற நேரங்களில் சோமவார மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவ மூா்த்திகளைத் தரிசிக்கவும், அங்கே வைக்கப்பட்டுள்ள கொலுவைப் பாா்வையிடவும் அனுமதிக்கப்பட்டனா்.