போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
விளாத்திகுளம் அருகே மேல்மாந்தையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
விளாத்திகுளம் அருகே மேல்மாந்தையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராமத்தை சோ்ந்தவா் சீனிவாசன் மகன் ராமசாமி (37). இவா் அப்பகுதியிலுள்ள 8 வயது சிறுமியை திண்பண்டம் வாங்கி தருவதாக மோட்டாா் சைக்கிளில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், விளாத்திகுளம் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் நாகலட்சுமி, விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ராமசாமியை கைது செய்தாா்.