உடற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டு விழா
ஆசிரியா் தினத்தையொட்டி கல்வி ரத்னா விருது பெற்ற வாறுதட்டு மாா் மத்தேயு காவுகாட் நினைவு உயா்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு பள்ளியில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
களியக்காவிளை: ஆசிரியா் தினத்தையொட்டி கல்வி ரத்னா விருது பெற்ற வாறுதட்டு மாா் மத்தேயு காவுகாட் நினைவு உயா்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு பள்ளியில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் என்.எம். பிரேம்ராஜின் கல்விச் சேவையை பாராட்டி ஓசூா் மற்றும் தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தாய் உள்ளம் அறக்கட்டளை, சேலம் மாவட்டம் மேட்டூரில் செயல்பட்டு வரும் அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை மற்றும் ரிச் மீடியா ஆகியவை சாா்பில் உடற்கல்வி ஆசிரியா் பிரேம்ராஜுக்கு, கல்வி ரத்னா விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து விருதுபெற்ற ஆசிரியருக்கு, வாறுதட்டு பள்ளித் தலைமையாசிரியா் சத்தியதாஸ், பாராட்டுத் தெரிவித்தாா்.
Advertisement
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளி ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.