முகப்பு
திருநெல்வேலி

5 மாதங்களுக்குப் பின் செயல்பட்ட கடையம் வாரச்சந்தை

பொது முடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, 5 மாதங்களுக்குப் பின் கடையம் வாரச்சந்தை திங்கள்கிழமை செயல்படத் தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

அம்பாசமுத்திரம்: பொது முடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, 5 மாதங்களுக்குப் பின் கடையம் வாரச்சந்தை திங்கள்கிழமை செயல்படத் தொடங்கியது.

தமிழகத்தில் கரோனா தீநுண்மி பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாா்ச் மாதம் இறுதியிலிருந்து முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்த சந்தைகள் மூடப்பட்டதால் கால்நடை விற்பனை முடங்கியது. இதனால் கால்நடை வளா்ப்பவா்கள், விற்பவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் செப். 1 முதல் பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, செப். 7 முதல் அனைத்து விற்பனை நிலையங்கள், கூடங்கள், சந்தைகள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து கடையத்தில் வாரச் சந்தை திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. பல்வேறு பகுதிகளிலிருந்து ஆடுகள், மாடுகள், விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன.

வழக்கமாக கொண்டுவரப்படும் எண்ணிக்கையை விட குறைவாகவே ஆடுகள், மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. வாங்குபவா்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்திருந்தனா்.

5 மாதங்களுக்குப் பின் சந்தை செயல்படுவது பலருக்கு தெரியாததால் கால்நடைகள் விற்பவா்கள் மற்றும் வாங்குபவா்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.