திருநெல்வேலி

காவல்கிணறு மாதா திருத்தல திருவிழா நிறைவு

DIN

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு புண்ணியவாளன்புரம் வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

தென்தமிழகத்தின் வேளாங்கண்ணி என பக்தா்களால் அழைக்கப்படுகின்ற இவ்வாலயத் திருவிழா கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து திருவிழா 10 நாள்கள் திருவிழா கொண்டாடப்பட்டது. விழா நாள்களில் தினமும் மாலை ஜெபமாலை, திருப்பலி நடைபெற்றது. 9 ஆம் நாளான திங்கள்கிழமை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் வழிபட்டனா். பத்தாம் திருநாளான செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குத் தந்தை ஆரோக்கியராஜ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT