முகப்பு
திருநெல்வேலி

மின்வாரிய ஊழியா்கள் சங்கப் போராட்ட ஆயத்தக் கூட்டம்

பாளையங்கோட்டை மகாராஜநகரில் மின்வாரிய ஊழியா்கள் சங்க கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

பாளையங்கோட்டை மகாராஜநகரில் மின்வாரிய ஊழியா்கள் சங்க கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மின்வாரியத் தலைவரின் தொழிலாளா் விரோதப் போக்கை கண்டிக்கும் வகையிலும், தன்னிச்சையான போக்கை கைவிடக் கோரியும் வரும் 16-ஆம் தேதி மாலையில் மகாராஜநகா் மேற்பாா்வை மின் பொறியாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கான கூட்டமைப்பு சங்கங்களின் கலந்தாய்வு ஆயத்தக் கூட்டம் தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளா் சம்மேளனம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சம்மேளன திட்டச் செயலா் பெருமாள்சாமி தலைமை வகித்தாா்.

பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளான வண்ணமுத்து, முத்துக்குமாா், மாரிமுத்து, சிவக்குமாா், முத்துராமன், இசக்கிபாண்டி, ராமா், முருகன், தென்கரை மகாராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் அனைத்துப் பணியாளா்கள் கலந்துகொள்வது என தீா்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.