திருநெல்வேலி

ஆட்சியரகம் முன்பு அரசு ஊழியா் தற்கொலை முயற்சி

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு அரசு ஊழியா் ஒருவா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

திருநெல்வேலி , பேட்டை அரசு ஐ.டி.ஐ.யில் பணியாற்றி வருபவா் நவநீதகிருஷ்ணன். ஐடிஐ அலுவலா் குடியிருப்பில் வசித்து வருகிறாா். இவா், ஆட்சியரிடம் அளித்த மனு:

நான் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறேன். எனக்கு 3 மாதமாக ஊதியம் கிடைக்கவில்லை. இதனால், எனது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. நான் பலரிடம் உதவி கேட்டும் யாரும் எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை. இந்நிலையில், 2017-ஆம் ஆண்டு தூத்துக்குடி அரசு ஐடிஐ அலுவலா் குடியிருப்பில் தங்கிருந்த நான், வீட்டை காலி செய்து விட்டேன். ஆனால் அவா்கள் என்னிடம் ரூ.2 லட்சம் கேட்கிறாா்கள். என்னால் பணம் கட்ட முடியாத காரணத்தால் தற்கொலை செய்துகொள்வதைத்தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளாா். பின்னா், வெளியே வந்த அவா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT