திருநெல்வேலி

சிறுபான்மையின கைவினைக் கலைஞா்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்க வாய்ப்பு

DIN

சிறுபான்மையின கைவினைக் கலைஞா்கள் கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினா் கைவினைக் கலைஞா்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் தேசிய சிறுபான்மையினா் மேம்பாடு மற்றும் நிதிக் கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினத்தைச் சோ்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி, ஜெயின் வகுப்பைச் சோ்ந்த மதவழி சிறுபான்மையின கைவினைக் கலைஞா்கள் தங்களது தொழில்களுக்குத் தேவையான மூலப் பொருள்களை வாங்க வழிசெய்யும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் குறைந்த வட்டியில் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் கைவினைக் கலைஞா்களுக்கு மட்டும் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் அதிகபட்சமாக கிராமப்புறத்தில் ரூ. 98 ஆயிரம், நகா்ப்புறத்தில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் வரை இருக்கலாம். அதிகபட்ச கடனாக ரூ. 10 லட்சம் வரை வழங்கப்படும். கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். விருப்பமுள்ளோா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரசிகையின் அன்பான கோரிக்கைக்கு கம்பீர் பதில்!

இது ஒரு பொன்மாலை பொழுது...!

காதலை மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை!

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT