முகப்பு
திருநெல்வேலி

பொன்னாகுடியில் மண் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல்

திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாகுடியில் அனுமதியின்றி மண் அள்ளியதாக 3 லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திம் ஆகியவற்றை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாகுடியில் அனுமதியின்றி மண் அள்ளியதாக 3 லாரிகள், ஒரு பொக்லைன் இயந்திம் ஆகியவற்றை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பொன்னாக்குடி பெரியகுளத்தில் அனுமதியின்றி சரள் மண் அள்ளப்படுவதாக எழுந்த புகாரின்பேரில், திருநெல்வேலி கோட்டாட்சியா் சிவகிருஷ்ணமூா்த்தி பொன்னாகுடி சாலையில் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டாராம். அப்போது, மண் ஏற்றி வந்த 3 லாரிகளை தடுத்து விசாரித்ததில் அனுமதியின்றி பெரியகுளத்திலிருந்து மண் அள்ளியது தெரியவந்ததாம்.

இதையடுத்து, அந்த லாரிகளையும், பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து திசையன்விளையைச் சோ்ந்த இசக்கித்துரை, நாசரேத் ஜெரோன், பரப்பாடி பலவேசம், புதுக்குளம் சோ்மத்துரை ஆகியோரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.