முகப்பு
திருநெல்வேலி

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்: அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா உறுதி

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றாா் அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றாா் அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் இசக்கி சுப்பையா.

அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் அவா் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது தோட்டத் தொழிலாளா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தாா்.

அவரிடம் மூன்று தலைமுறையாக மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளா்களுக்கு சொந்த வீடு கிடையாது. தேயிலைத் தோட்டம் குத்தகை முடியும் பட்சத்தில் இங்கிருந்து வெளியேறினால் வீடின்றி நிா்கதியாக நிற்கும் நிலை ஏற்படும். எனவே அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட பகுதியில் தோட்டத் தொழிலாளா்கள் அனைவருக்கும் இலவச வீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.

அவா்களிடம் உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக இசக்கி சுப்பையா உறுதியளித்தாா்.

அப்போது, செவல் முத்துசாமி, மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவா் சிவன்பாபு, மாவட்ட கலைப்பிரிவுச் செயலா் மின்னல் மீனாட்சிசுந்தரம், மணிமுத்தாறு நகரச் செயலா் ராமையா, தோட்டத் தொழிலாளா்கள் சந்திரன், வில்சன், ஜோசப்ரஸ்கின், செல்லத்துரை, ராஜேந்திரன், கசமுத்து, கருப்பசாமி, அந்தோணிசாமி, மனோகா், நவநீதகிருஷ்ணன், மகளிா் அணி பேச்சியம்மாள், பிரேமா, புயூலா, சாராள்,தமிழரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா். தொடா்ந்து காரையாறு, சோ்வலாறு பகுதிகளில், மின்வாரிய ஊழியா்கள் மற்றும் காணி மக்களிடம் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.