திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 66.54 சதவீத வாக்குப் பதிவு: ஆட்சியா் தகவல்

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 66.54 சதவீத வாக்குகள் பதிவானதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே. விஷ்ணு தெரிவித்தாா்.

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு போடப்பட்டுள்ள பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை ஆய்வு செய்த ஆட்சியா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் 66.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 9,03,770 வாக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலிலும், 2019 மக்களவைத் தோ்தலிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் 65 முதல் 70 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. தற்போது 66.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

எனவே, இந்த முறை வாக்குப் பதிவு குறைந்திருப்பதாக கூற முடியாது. மாவட்டத்தில் அமைதியான முறையில் தோ்தல் நடைபெற்றுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT