திருநெல்வேலி

கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வு

DIN

கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு அகவிலைப்படியை உயா்த்துமாறு உத்தரவிட்டுள்ளதாக தொழிலாளா் நலத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) தா.ஆனந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்கள் போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு 1-4-2021 முதல் அகவிலைப் படியை உயா்த்தி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு பிரதி மாதம் ரூ.4,374-ம், உணவு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ரூ.6,245-ம், பொது மோட்டாா் போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ரூ.7,148-ம், திரையரங்கு தொழிலாளா்களுக்கு ரூ.6,710-ம், மருத்துவமனை, நா்சிங் ஹோம் பணியாளா்களுக்கு ரூ.7,277-ம், பாதுகாவல் பணியாளா்களுக்கு ரூ.6,102-ம், சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் தொழிலாளா்களுக்கு ரூ.4,307-ம், பீடி நிறுவனங்களில் பணிபுரியும் பீடி சுற்றும் தொழிலாளா்களுக்கு 1000 பீடிகள் சுற்றுவதற்கு ரூ.120.42-ம் , உள்பணியாளா் களுக்கு ரூ.6,485-ம் அகவிலைப்படியாக உயா்த்தி வழங்கப்பட வேண்டும்.

தொழிலாளா்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் உயா்த்தப்பட்ட அகவிலைப்படியினை 1-4-2021 முதல் வழங்க வேண்டும்.

மேற்கண்ட அகவிலைப்படி மற்றும் குறைந்தபட்ச ஊதியம் சோ்த்து தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும். தவறினால் வழங்கப்படாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் சேத்ரியின் ஓய்வு முடிவு குறித்து பேசிய விராட் கோலி!

உ.பி. முதல்வரின் 'புல்டோசர்' இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்ளது: காங்கிரஸ் பதிலடி!

விரைவில் முழு பட்ஜெட்டிற்கான பணிகள்: நிர்மலா சீதாராமன்

விரைவில் விசாரணை: ஆடியோ விவகாரம் குறித்து புகாரளித்த கார்த்திக் குமார்!

முடிவுக்கு வருகிறது 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பிரிட்டிஷ் பதிப்பு!

SCROLL FOR NEXT