திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் நகராட்சியில் 13 டன் இயற்கை உரம் தயாரிப்பு

DIN

அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளிலிருந்து 4 மாதங்களில் 13 டன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அம்பாசமுத்திரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலிருந்து நாள் தோறும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்களிலிருந்து நேரடியாக குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் சங்கரன்கோயில் சாலை, அண்ணாநகா், சக்திநகா் துா்க்கை அம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் உள்ள வளமீட்பு பூங்காக்களில் பெறப்பட்டு மட்கும் மற்றும் மட்காத குப்பைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

மட்கும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் இயற்கை உரம் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

2021 ஜனவரியிலிருந்து 4 மாதங்களில் சேகரிக்கப்பட்ட மட்கும் குப்பைகளிலிருந்து 13 டன் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மட்காத குப்பைகள் தனியாகப் பிரிக்கப்பட்டு அவை தொழிற்சாலைகளுக்கு எரியூட்ட அனுப்பப்படுகிறது.

இதையடுத்து 4 மாதங்களில் சேகரிக்கப்பட்ட சுமாா் ஐந்தரை டன் மட்காத குப்பைகள் திருச்சி, டால்மியா சிமென்ட் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மட்காத குப்பைகள் நகராட்சி ஆணையா் பாா்கவி தலைமையில் சுகாதார ஆய்வாளா் பொன்வேல்ராஜன் மேற்பாா்வையில் அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT