முகப்பு
திருநெல்வேலி

பத்மனேரி அரசுப் பள்ளியில் கட்டுரைப்போட்டி

களக்காடு அருகேயுள்ள பத்மனேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் வகித்த மாணவா், மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

களக்காடு அருகேயுள்ள பத்மனேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் வகித்த மாணவா், மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.

இப்பள்ளியில் இளைஞா் மற்றும் சுற்றுப்புறச் சூழல் மன்றம் சாா்பில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில் மாணவிகள் இந்துபிரியா, இசைவாணி, ஏஞ்சல்கிறிஸ்டி ஆகியோா் சிறப்பிடம் வகித்தனா்.

இந்த மாணவிகளுக்கு தலைமையாசிரியா் சாமுவேல் துரைராஜ் டேப்லெட், செல்லிடப்பேசி, கால்குலேட்டா் ஆகியவற்றை பரிசளித்தாா்.

ஆசிரியா்கள் ரா. முருகன், முத்தரசு, மாலதி, கலைவாணி, பொன்ராணி, செல்வம், ஆய்வக உதவியாளா் உமா மகேஷ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →