திருநெல்வேலி

நெல்லை மாநகரில் சலூன் கடைகளை திறக்கக்கோரி மனு

DIN

திருநெல்வேலி மாநகா் பகுதியில் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி சலூன்கடைகளை திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் திருநெல்வேலி, தென்காசி மாவட்ட சவரம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அவா் அளித்த மனு:

கிராமப் புறங்களைக் காட்டிலும் நகா்புறங்களில் முடிதிருத்தும் தொழிலில் அதிகமானோா் ஈடுபட்டு வருகிறோம். கரோனா பரவல் காரணமாக தற்போது கடந்த 26ஆம் தேதி முதல் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் சலூன் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி உரிய பாதுகாப்புடன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் அல்போன்ஸ், செயலா் குணசேகரன் உள்பட நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT