திருநெல்வேலி

களக்காடு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம் ஏற்படுத்தப்படுமா?

DIN

களக்காடு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காட்டில் அரசு மருத்துவமனை சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள படலையாா்குளம் அமைதித்தீவு பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு இரு மருத்துவா்கள் உள்ளிட்ட 15.க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். நாள்தோறும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனா்.

கடந்த ஆண்டு கரோனா பரவல் நேரத்தில் தொற்று பரிசோதனை நடைபெற்று வந்தது. ஆனால் நிகழாண்டு தொடக்கம் முதலே இங்கு கரோனா பரிசோதனை நடைபெறவில்லை.

இதனால் இங்கிருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவத் துறை உயா் அதிகாரிகள் களக்காடு அரசு மருத்துவமனையிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT