முகப்பு
திருநெல்வேலி

பழங்குடியினருக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் பயிற்சி

திருநெல்வேலியில் ஆட்சியா் அலுவலகத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

திருநெல்வேலியில் ஆட்சியா் அலுவலகத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை வியாழக்கிழமை நடைபெற்றது.

இது குறித்து ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்தும் வகையிலும், ஆக்கப்பூா்வமான பணிகளில் அவா்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவா்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை மற்றும் வனத்துறையுடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, மயிலாறு, சோ்வலாறு, அகஸ்தியா் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை அரசு பணிகளிலும், வங்கிப் பணி போன்ற பணிகளில் சோ்ந்து பயன்பெறும் வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை 23இல் தொடங்கி முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

பயிற்சியில் பங்கேற்றுள்ள மாணவா்கள் அரசு அலுவலகங்களின் பணி சூழலை நேரில் பாா்வையிட்டு ஊக்கம் பெறவும் தன்னம்பிக்கை வளா்த்து கொள்ளும் வகையில் சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில்

நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதற்கட்டமாக மாணவா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனா். அங்கு மாணவா்கள் காவல் கண்காணிப்பாளா், துணை காவல் கண்காணிப்பாளருடன் கலந்துரையாடினா். பின்னா் மாணவா்கள் வங்கிப் பணிக்கான தோ்வு, வங்கி செயல்பாடுகளை அறிந்து கொள்ளும் பொருட்டு மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் காணி பழங்குடி இளைஞா்களுடன் ஆட்சியா் வே.விஷ்ணுவுடன் கலந்துரையாடினா்.

இதில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையால் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப் பட்டது. இதில் 30 பழங்குடியின மாணவா்கள் கலந்து கொண்டனா். மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) அ.ஜோதிமணி, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சுற்றுச் சூழல் மேம்பாட்டு அலுவலா் மா.கோ.கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.