தலைமையான அறிவுடையவர்கள் யார்?
செல்வங்களின் நிலையாமையினையும், நோய் மூப்புச் சாக்காடு என வரும் உடலின் நிலையாமையையும் குறித்து, மனத்திற் கொண்டவராகத், தலைமையான அறிவுடையவர்கள் தமக்குரிய உயிர்க்கு...
நிலையாமை, நோய், மூப்புச் சாக்கடென் றெண்ணித்,
தலையாயார் தங்கருமம் செய்வார்;-தொலைவில்லாச்
சத்தமுஞ் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
Advertisement
Advertisement
பித்தரிற் பேதையார் இல்.
( பாடல் 52 அதிகாரம்: துறவு )
செல்வங்களின் நிலையாமையினையும், நோய் மூப்புச் சாக்காடு என வரும் உடலின் நிலையாமையையும் குறித்து, மனத்திற் கொண்டவராகத், தலைமையான அறிவுடையவர்கள் தமக்குரிய உயிர்க்கு உறுதியான நல்ல செயல்களையே செய்வார்கள் என்றும் போலியான நூல்களும், வருவதை உரைக்கும் சோதிட நூல்களும் என்று சொல்லப்பட்டவற்றையே நாளும் பிதற்றித் திரிகின்ற பைத்தியக்காரர்களை விடப், புத்தி கெட்டவர்கள் உலகத்தில் எவருமே இலராவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.