FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்

தூங்கிக் கொண்டிருப்பது யார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு தவெக கேள்வி..

Updated On : 30 ஜூலை 2026, 3:13 pm IST
தவெக அறிக்கை - Center-Center-Chennai
பகிர்:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவெக அரசு தூங்கிக் கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தூங்கிக் கொண்டிருப்பது யார் என்று தவெக பதில் கொடுத்துள்ளது.

தவெக வெளியிட்ட பதிவில்,

மேகதாது அணை விவகாரம், 2026 மே 10ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல உளறுகிறது, தி.மு.க. தலைமை. அப்படியெனில், தூங்கிக்கொண்டிருப்பது யார் என்பதற்குத் திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதுதானே?

Advertisement

Advertisement

தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும் தானே முதலமைச்சர் என்பது போல பேசுவதுதான் யதார்த்த உலகில் இருந்து மாறுபட்டு இருப்பது என்பதைத் தி.மு.க. தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம் போல ஆளே இல்லை போல.

ஆட்சியில் இருந்தபோது ஆக்டிவ்e-ஆக இருந்திருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை இன்ஆக்டிவ் மோடுக்குத் தள்ளி இருக்க மாட்டார்களே.

யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையில், வயிற்றெரிச்சலில், பதவி வெறியில் தி.மு.க. பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். தி.மு.க.தான் இன்னும் உணராமல் இருக்கிறது.

மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட, த.வெ.க. அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது என்று பதிவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments