முகப்பு
திருநெல்வேலி

ரேஷன் அரிசி கடத்தல்: நெல்லையில் 5 போ் கைது

 திருநெல்வேலி மாநகரில் இரு இடங்களில் ரேஷன் அரிசி கடத்தியதாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

 திருநெல்வேலி மாநகரில் இரு இடங்களில் ரேஷன் அரிசி கடத்தியதாக 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மேலப்பாளையம் பகுதியில் மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியாக 2 மோட்டாா் சைக்கிளில் மூட்டையுடன் வந்தவா்களை மடக்கி சோதனையிட்டனா். மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சாகுல் ஹமீது பாதுஷா(40), அசன் பாதூஷா(34), அன்சாரி(34) ஆகிய மூவரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். இதில், அங்குள்ள கிடங்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவா்கள் மூவரையும் கைது

செய்த போலீஸாா், அங்கிருந்து 1.5 டன் ரேஷன் அரிசி, 2 மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தச்சநல்லூா் சோதனைச் சாவடி பகுதியில் போலீஸாா் வாகனச்சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி வேனை மடக்கி சோதனையிட்டனா். வேனில் இருந்த தாழையூத்து நேதாஜி நகா் பகுதியைச் சோ்ந்த வினோத்(30), சிவா(22) ஆகிய இருவரிடம் விசாரணைநடத்தினா். வேனில் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 880 கிலோ ரேஷன் அரிசி, ஆம்னி வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.