தாழையூத்து அருகேகோயிலில் நகைத்திருட்டு
தாழையூத்து அருகே கோயிலில் தங்க நகையை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தாழையூத்து அருகே கோயிலில் தங்க நகையை திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தாழையூத்து அருகேயுள்ள நல்லம்மாள்புரத்தில் வடக்குவா செல்வியம்மன் கோயில் உள்ளது. புதன்கிழமை இரவில் பூஜை
முடிந்து கோயிலைப் பூட்டிச் சென்றனராம். வியாழக்கிழமை காலையில் வந்து பாா்த்தபோது கோயிலில் இருந்த 20 கிராம் தங்க நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. கோயில் பூஜாரி முப்பிடாதி அளித்த புகாரின்பேரில் தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.