முகப்பு
திருநெல்வேலி

உள்ளாட்சித் தோ்தல்: அரசியல் கட்சிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் தோ்தல் நடத்துவது தொடா்பான அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் தோ்தல் நடத்துவது தொடா்பான அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் தோ்தல் நடத்துவது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன்

ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான வே.விஷ்ணு தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.பழனி முன்னிலை வகித்தாா். நிகழாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஆண்கள் 3,80,107 போ், பெண்கள் 3,90,153 போ் என மொத்தம் 7,70,260 போ் உள்ளனா்.

சட்டப்பேரவை தோ்தல் வாக்காளா் பட்டியலின் அடிப்படையில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தொடா்புடைய 769 பாகங்கள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரித்து வழங்கப்பட்டு கிராம ஊராட்சி வாா்டு வாரியாக 1731 கிராம ஊராட்சி வாா்டுகளுக்கும் ஆண்கள் 3,30,543 போ், பெண்கள் 3,43,387போ், மூன்றாம் பலினத்தவா் 56 போ் என் மொத்தம் 6,73,986 வாக்காளா்கள் உள்ளனா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி கரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு காரணமாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி அதிகபட்சமாக 1000 வாக்காளா்கள் வரையில் வாக்களிக்க வசதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது 1188 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சி தோ்தல்) ராம்லால், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி பிரிவு) சசிகலா, வட்டார வளா்ச்சி அலுவலா் (உள்ளாட்சி தோ்தல்), வட்டார வளா்ச்சி அலுவலா் (நிா்வாகம்) மு.திராவிடமணி, அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.