திமுகவை விட அதிக பெண் வேட்பாளர்களைக் களமிறக்கிய தவெக!
தமிழ வெற்றிக் கழகத்தின் சார்பாக களமிறங்கும் பெண் வேட்பாளர்கள் குறித்து...
தமிழ வெற்றிக் கழகத்தின் சார்பாக 23 பெண் வேட்பாளர்களை அந்தக் கட்சியின் தலைவர் விஜய் இன்று (மார்ச் 29) அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஆளும் திமுக கட்சியின் சார்பாக 18 பெண் வேட்பாளர்கள் இந்தச் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார்கள். தமிழகத்தில் அதிகபட்சமாக நாம் தமிழர் கட்சியில் 50 சதவிகித பெண்கள் (117 ) வேட்பாளர்களாக களமிறங்குவதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில், தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
Advertisement
Advertisement
திமுக அணி பலம்வாய்ந்த கூட்டணியாக 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுகவின் 164 வேட்பாளர்களில் 18 பேர் பெண் வேட்பாளர்களாக களமிறங்க, தவெக சார்பில் 23 பெண்கள் போட்டியிடுகிறார்கள்.
இந்தப் பட்டியலில் தமிழக வெற்றிக் கழகத்தில் 8 பெண்கள் தனித் தொகுதியிலும் ஜே.லெட்சுமி என்பவர் ஏற்காடு (பழங்குடி) தொகுதியிலும் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.
திரு.வி.க.நகர் (தனி) - பல்லவி
குமாரப்பாளையம் - விஜயலெட்சுமி
திருப்பூர் வடக்கு - சத்யபாமா
மதுராந்தகம் (தனி) - எழில் கேத்தரின்
ராணிப்பேட்டை - தாஹிரா
குடியாத்தம் (தனி) - சிந்து
பாப்பிரெட்டிப்பட்டி - திலகவதி
கெங்கவல்லி (தனி) - சுஜாதா
ஏற்காடு (பழங்குடி) - ஜே.லெட்சுமி
தாராபுரம் (தனி) - கௌரி சித்ரா
பவானிசாகர் (தனி) - கலைச்செல்வி
அவிநாசி (தனி) - கமலி
கவுண்டம்பாளையம் - கனிமொழி
ஆத்தூர் - கலைச்செல்வி
வேடச்சந்தூர் - நாகஜோதி
குன்னம் - ரேவதி
ஜெயங்கொண்டம் - கவிதா
சிவகங்கை - குழந்தை ராணி நாச்சியார்
ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி
சிவகாசி - கீர்த்தனா
முதுகுளத்தூர் - மலர்விழி
வாசுதேவநல்லூர் (தனி) - அமுதராணி
பல்லாவரம் - காமாட்சி
TVK announced More Female Candidates Than the DMK in 2026 Election!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.