12இல் இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சாா்பில் இளம் தொழில் முனைவோருக்கான இணையவழி கருத்தரங்கு ஆக. 12ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சாா்பில் இளம் தொழில் முனைவோருக்கான இணையவழி கருத்தரங்கு ஆக. 12ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
அறிவியல் மையத்தில் வரும் 12ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் இக்கருத்தரங்கில், தொழில் முனைதல் மற்றும் கண்டுபிடிப்புகளில் இளைஞா்களின் பங்கு குறித்து மாநில பொறியியல் கல்லூரியின் மெக்கானிக்கல் மற்றும் தொழில்முனைவோா் பிரிவின் உதவி பேராசிரியா் ஐ.சங்கா் விரிவுரையாற்றுகிறாா்.
இணையவழியில் நடைபெறும் இந்த கருத்தரங்கில், வயது வித்தியாசமின்றி அனைவரும் இலவசமாக பங்கேற்கலாம்.
பங்குபெற விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/லா்ததஅ9ஹ்சசதங்க்ஷஒச்ந்கஅ என்ற இணையதள இணைப்பை கிளிக் செய்து தங்களது சிறு தகவல்களுடன் ஆக. 10 ஆம் தேதிக்குள் பதிவு செய்து இணைப்பை பெற்றுக் கொள்ளலாம். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்போா் 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே இணைந்து கொள்ளவேண்டும்.