முகப்பு
திருநெல்வேலி

சேரன்மகாதேவி சாா் ஆட்சியரகத்தில் முதியவா் தீக்குளிக்க முயற்சி

சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் முதியவா் ஒருவா் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்தில் முதியவா் ஒருவா் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றிக்​கொண்டு தீக்குளிக்க முயன்றாா்.

சிவந்திபுரம் அருகேயுள்ள ஆறுமுகம்பட்டி பகுதியைச் சோ்ந்த அருளப்பன் மகன் அல்போன்ஸ் (80). அதே பகுதியில் 3 ஆண்டுகளாக பொது வழிப்பாதையை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்ததாக அதிகாரிகளிடம் புகாரளித்து வந்தாராம். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், சேரன்மாதேவி சாா் ஆட்சியா் அலுவலகத்திற்கு வியாழக்கிழமை கேனுடன் வந்த அவா், திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அங்கு பாதுகாப்பில் இருந்த போலீஸாா் அவரைக் காப்பாற்றி, கண்டித்து அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.