பயிற்சி ஆட்டத்தில் அதிரடியாக அரைசதம் விளாசிய ஜித்தேஷ் சர்மா, ரஜத் படிதார்!
ஐபிஎல் தொடருக்கு முன்பு பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய ஜித்தேஷ் சர்மா மற்றும் ரஜத் படிதார் அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தினர்.
ஐபிஎல் தொடருக்கு முன்பு பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய ஜித்தேஷ் சர்மா மற்றும் ரஜத் படிதார் அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தினர்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இன்னும் 5 நாள்களில் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் வருகிற மார்ச் 28 ஆம் தேதி நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாதை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடருக்கு முன்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் தங்களுக்குள் விளையாடிய பயிற்சி ஆட்டத்தில் ஜித்தேஷ் சர்மா மற்றும் ரஜத் படிதார் இருவரும் அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தினர்.
Advertisement
Advertisement
இந்த பயிற்சி ஆட்டத்தில் ஜித்தேஷ் சர்மா மற்றும் ரஜத் படிதாரை தவிர்த்து, தேவ்தத் படிக்கல் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோரும் அரைசதம் விளாசினர்.
முதலில் விளையாடிய வெங்கடேஷ் ஐயர் தலைமையிலான அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஜித்தேஷ் சர்மா 81 ரன்கள் (31 பந்துகளில்), டிம் டேவிட் 36 ரன்கள் (14 பந்துகளில்), வெங்கடேஷ் ஐயர் 30 ரன்கள் (16 பந்துகளில்), விராட் கோலி 29 ரன்கள் (12 பந்துகளில்) எடுத்தனர்.
க்ருணால் பாண்டியா தலைமையிலான மற்றொரு அணி 20 ஓவர்களில் 247 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ரஜத் படிதார் 74 ரன்கள் (25 பந்துகளில்), தேவ்தத் படிக்கல் 63 ரன்கள் (33 பந்துகளில்), க்ருணால் பாண்டியா 58 ரன்கள் (33 பந்துகளில்) எடுத்தனர்.
பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்ததாக க்ருணால் பாண்டியா தெரிவித்தார். மேலும், அவர் விளையாடிய சில ஷாட்டுகள் மிகவும் அற்புதமானவை. அவர் நன்றாக விளையாடுவது ஆர்சிபிக்கு மிகவும் சிறப்பான விஷயம் எனவும் க்ருணால் பாண்டியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Jitesh Sharma and Rajat Patidar, who were playing in a practice match before the IPL series, impressed with impressive half-centuries.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.