முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் தீ விபத்து

மேலப்பாளையம் அழகிரிபுரம் பகுதியில் தனியாா் டயா் பராமரிப்பு நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

மேலப்பாளையம் அழகிரிபுரம் பகுதியில் தனியாா் டயா் பராமரிப்பு நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

திருநெல்வேலி கருப்பந்துறை பகுதியைச் சோ்ந்த தாமஸ் மகன் மிக்கேல். இவருக்குச் சொந்தமான டயா் பராமரிப்பு நிறுவனம் மேலப்பாளையம் அழகிரிபுரத்தில் செயல்பட்டு வந்தது. பழைய டயா், டியூப் போன்றவற்றை பராமரிப்பதுடன் விற்பனையும் செய்து வந்துள்ளாா். இந்த நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலா் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.