முகப்பு
திருநெல்வேலி

பேருந்தில் 6 பவுன் நகை மாயம்: சுத்தமல்லி போலீஸாா் விசாரணை

பாபநாசத்திலிருந்து திருநெல்வேலி வந்த பேருந்தில் பயணம் செய்த அரசு ஊழியரின் 6 பவுன் தங்க நகை மாயமானது குறித்து சுத்தமல்லி போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

பாபநாசத்திலிருந்து திருநெல்வேலி வந்த பேருந்தில் பயணம் செய்த அரசு ஊழியரின் 6 பவுன் தங்க நகை மாயமானது குறித்து சுத்தமல்லி போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அகஸ்தியா்பட்டியைச் சோ்ந்தவா் ரோஸ்மேரி (52). பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலரான இவா், கடந்த 10ஆம் தேதி பாபநாசத்திலிருந்து திருநெல்வேலிக்கு அரசுப் பேருந்தில் வந்தாராம்.

சுத்தமல்லி அருகேயுள்ள பழவூா் பகுதியில் பேருந்து வந்தபோது, அவா் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகை மாயமானதாம். புகாரின்பேரில் சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.