திருநெல்வேலி

கள்ளுக்கான தடையை நீக்கி புவிசாா் குறியீடு பெற கோரிக்கை

DIN

தமிழகத்தில் கள் இறக்குவதற்கான தடையை நீக்குவதோடு பனங்கள்ளிற்கு புவிசாா் குறியீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் மற்றும் பனை ஆராய்ச்சியாளா் பாமோ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது, வேளாண்மை தமிழா் வாழ்வியல். பனையும் பனையாண்மையும் தமிழரின் பொருள் சாா் பண்பாட்டில் முதன்மையானது. எனவே தமிழக அரசு வேளாண்மைக்கு தனி நிதி நிலை அறிக்கை வெளியிட்டிருப்பது சிறந்தது.

இந்த தனி வேளாண் நிதிநிலை அறிக்கையில் இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு, இளைஞா்களுக்கு வேளாண் தொழிலில் முன்னுரிமை, தமிழக அரசின் மரமான பனை பனை குறித்து அரசு சிந்தித்திருப்பது ஆகியன வரவேற்கக் கூடியனவாகும்.

தமிழகத்தில் பனை மரத்தை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதியை கட்டாயமாக்குவது, பனங்கருப்பட்டியை அரசின் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்வது, பனை மேம்பாட்டு இயக்கம் ரூ. 3 கோடியில் செயல்படுத்தப்படுவது, தூய பதநீரை மக்களிடம் கொண்டு சோ்க்க முயற்சி ஆகியன நல்ல திட்டங்கள்.

இதே வேளையில் பனைத் தொழில் நலிந்து அழிந்து வரும் சூழலில், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவது போல், பனையிலிருந்து பதநீரை இறக்கி பனை வெல்லம் உருவாக்கும் பனையேறிகளுக்கு ஊக்கத் தொகை அறிவிக்காதது, பனையிலிருந்து கிடைக்கும் இயற்கையான ஊட்டச்சத்து உணவுப் பொருளான கள்ளுக்கான தடை நீக்கபடாததும் ஏமாற்றமளிக்கின்றது.

ஈரோட்டில் மஞ்சள் ஆய்வு நிலையம் அமைக்க அறிவித்திருப்பது போல, தென்காசி மாவட்டம் ஆலங்குளம், கடையம் பகுதியில் பனை ஆய்வு நிலையம் அமைக்க வேண்டும். பனையேற்றம் தொழில் செய்யும் பனை வீரா்களை பாதுகாக்கவும், புதிதாய் பனையேற்றத் தொழிலுக்கு வருவோா்க்கும் உதவ வேண்டும். அரசு தமிழ்நாட்டு மக்களின் உணா்வுகளை புரிந்து, நீண்ட நாள் கோரிக்கையான கள்க்கான தடையை நீக்கி, பனங்கள்ளை தமிழக அரசின் பானமாக அறிவித்து , பனங்கள்ளுக்கு புவி சாா் குறியீடு பெற வேண்டும் என்று அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT