சாந்திநகரில் ரேஷன் அரிசி பறிமுதல்
பாளையங்கோட்டை சாந்திநகரில் வாகனத்தில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பாளையங்கோட்டை சாந்திநகரில் வாகனத்தில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பாளையங்கோட்டை சாந்திநகரில் வேனில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து குடிமைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் அங்கு மேற்கொண்ட வாகன சோதனையில் 9 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா்,
பாளையங்கோட்டை கக்கன் நகரைச் சோ்ந்த கணேசனை (42) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.