அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர்கள் வெளியீடு! முதல்வர் ஸ்டாலினுடன் யார் போட்டி?
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுகவின் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 29) அறிவித்தார். முன்னதாக, இரண்டு கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்த நிலையில், இன்று இறுதிக்கட்டமாக 17 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.
இதன்படி, திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அதிமுகவின் துணைச் செயலாளர் சந்தானகிருஷ்ணன் போட்டியிடவுள்ளார்.
Advertisement
Advertisement
கடந்த தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதிராஜாராம், இந்த முறை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும், துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக ராயபுரம் ஆர். மனோவும், திருச்சுழி தொகுதியில் தங்கம் தென்னரசுக்கு எதிராக ராஜவர்மனும் போட்டியிடுகின்றனர்.
அதிமுகவின் இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியலின்படி,
ஆயிரம்விளக்கு தொகுதியில் பா. வளர்மதி, அண்ணாநகரில் கோகுல இந்திரா, சேப்பாக்கத்தில் (திருவல்லிக்கேணி) ஆதிராஜாராம், திட்டக்குடியில் (தனி) என். முருகுமாறன், துறைமுகத்தில் ராயபுரம் ஆர். மனோ, விருகம்பாக்கத்தில் விருகை வி.என். ரவி, தியாகராயநகரில் பி. சத்தியநாராயணன், வேளச்சேரியில் எம்.கே. அசோக், சோழிங்கநல்லூரில் கே.பி. கந்தன், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஆர்.எஸ். ராஜேஷ், வில்லிவாக்கத்தில் எஸ்.ஆர். விஜயகுமார், திருச்சுழியில் ராஜவர்மன், ஆலந்தூரில் சரவணன், கொளத்தூரில் சந்தானகிருஷ்ணன், திரு.வி.க.நகரில் (தனி) பொற்கொடி, எழும்பூரில் (தனி) அபிஷேக் ரங்கசாமி, ஆலங்குடியில் தன. விமலும் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே, தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் கட்சியின் தலைவர் விஜய், இன்று (மார்ச் 29) சென்னை நுங்கம்பாக்கத்தில் அறிமுகம் செய்கிறார்.
TN Assembly Election 2026: AIADMK Releases Final List of Candidates!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.