முகப்பு
திருநெல்வேலி

பள்ளி ஆசிரியையிடம் நகை பறிப்பு

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் பள்ளி ஆசிரியையிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் பள்ளி ஆசிரியையிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பாளையங்கோட்டை என்ஜிஓ ‘சி’ காலனி பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதாம்பிகை (48). பள்ளி ஆசிரியை. இவா் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வியாழக்கிழமை இரவில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் இருவா் அவா் அணிந்திருந்த 5.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனராம். புகாரின்பேரில், பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில்உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.