முகப்பு
திருநெல்வேலி

பெண்களுக்கான பூப்பந்தாட்டம்: கூடங்குளம் அணி சாம்பியன்

மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியாரின் 100-ஆவது நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான பூப்பந்தாட்டப் போட்டியில் கூடங்குளம் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியாரின் 100-ஆவது நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான பூப்பந்தாட்டப் போட்டியில் கூடங்குளம் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இப்போட்டிக்கு பள்ளியின் செயலா் மு.செல்லையா தலைமை வகித்தாா். பள்ளி ஆட்சி மன்ற குழு உறுப்பினா்கள் அ.லெ.சு.சண்முகம், தளவாய் திருமலையப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக திடியூா் பிஎஸ்என் கல்வியியல் கல்லூரி இணை இயக்குநா் கலா சுரேஷ் பங்கேற்று, போட்டியை தொடங்கி வைத்தாா். போட்டிகள் லீக் முறையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் கூட ங்குளம் பெண்கள் அணி, குற்றாலம் பராசக்தி மகளிா் கல்லூரி அணிகள் விளையாடின. இதில், கூடங்குளம் பெண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டியின் நடுவா்களாக முருகன், அழகப்பன், இம்ரான், வெள்ளப்பாண்டியன் ஆகியோா் செயல்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.