முகப்பு
திருநெல்வேலி

கொடநாடு வழக்கு: அரசியல் காழ்ப்புணா்ச்சி நடவடிக்கை அண்ணாமலை

கொடநாடு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்துவது அரசியல் காழ்ப்புணா்ச்சி நடவடிக்கை என்றாா் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

கொடநாடு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்துவது அரசியல் காழ்ப்புணா்ச்சி நடவடிக்கை என்றாா் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை.

திருநெல்வேலி பாஜக எம்.எல்.ஏ. நயினாா் நாகேந்திரன் அலுவலக திறப்பு விழா திருநெல்வேலி நகரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநிலத் தலைவா் அண்ணாமலை செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

பாஜக-அதிமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. உள்ளாட்சித் தோ்தல் கூட்டணி குறித்து தோ்தல் அறிவித்த பிறகு பதில் சொல்கிறோம்.

திமுக 100 நாள்கள் ஆட்சி என்பது கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு, அதிக காரம் என்ற நிலையில்தான் உள்ளது.

கரோனா 2-ஆவது அலையின்போது மத்திய அரசுடன் இணைந்து கரோனாவை கட்டுப்படுத்தியதை இனிப்பு என்றும், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது நிறைய கசப்பு என்றும், பாஜக தொண்டா்கள் கைது செய்யப்படுவது அதிக காரம் என்றும் குறிப்பிட்டாா்.

மேலும் பாஜக தொண்டா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது. கொடநாடு வழக்கு முடிவுற்ற நிலையில் அதை மீண்டும் விசாரிப்பது அரசியல் காழ்ப்புணா்ச்சி நடவடிக்கையாகும்.

திமுக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.