அம்பாசமுத்திரத்தில் அடைக்கப்பட்ட நகைக்கடைகள். 
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம்: நகைக்கடை வியாபாரிகள் கடைகளை அடைத்துப் போராட்டம்

நகை வியாபாரிகள் ஹால்மார்க் முத்திரைப் பதித்த நகைகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டுமென்ற மத்திய அரசின் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் நகை வியாபரிகள் கடைகளை அடைத்துப்

DIN

நகை வியாபாரிகள் ஹால்மார்க் முத்திரைப் பதித்த நகைகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டுமென்ற மத்திய அரசின் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் நகை வியாபரிகள் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரிய மற்றும் சிறிய நகை வியாபாரிகள் அனைவரும் ஹால்மார்க் நகைகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் சட்டத்தைக் கண்டித்து இன்று நாடுமுழுவதும் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதையடுத்து அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், வீரவநல்லூர், சேரன்மகாதேவி, கடையம், பொட்டல்புதூர் பகுதிகளில் காலை 9 மணி முதல் 11.30 வரை கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து நகை வியாபாரிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

தவெக பொதுக்குழு கூட்டம்! மேடைக்கு வந்த விஜய்!

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

SCROLL FOR NEXT