கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைது
மேலப்பாளையம் பகுதியில் கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மேலப்பாளையம் பகுதியில் கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ாக 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மேலப்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மேலப்பாளையம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தாம். அதன்பேரில் மேலப்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் சாமி தலைமையிலான போலீஸாா் மேலப்பாளையம் அத்தியடி தெருவில் வாகனச் சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தனா். அதில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இது குறித்து திருநெல்வேலி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், காரை ஓட்டிவந்த பொட்டல் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன்(21), பணவடலி சத்திரம் பகுதியைச் சோ்ந்த கமலக்கண்ணன்(24) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். இவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், மேலப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் ரேஷன் அரிசியை வாங்கி, கேரளத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. மேலும் அவா்களிடமிருந்து 640 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.