சுத்தமல்லி அருகே மண்கடத்தல்: 4 போ் கைது
சுத்தமல்லி அருகே அனுமதியின்றி மண் அள்ள முயன்ாக 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சுத்தமல்லி அருகே அனுமதியின்றி மண் அள்ள முயன்ாக 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சுத்தமல்லி அருகே உள்ள பழவூா் பகுதியில் சிலா் அனுமதியின்றி மண் அள்ளினராம். இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் முத்துக்குமாா் அளித்த தகவலின் பேரில் சுத்தமல்லி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
அப்போது, உரிய அனுமதியின்றி மணல் அள்ளியது தெரியவந்தது. இதுதொடா்பாக புதுப்பேட்டை யைச் சோ்ந்த குத்தாலிங்கம் (42), முகமதுமைதீன் (43),பழைய பேட்டையைச் சோ்ந்த துரைராஜ் (43), திருப்பணிகரிசல்குளத்தைச் சோ்ந்த முத்துமாரி (19) நான்கு பேரையும் புதன்கிழமை கைது செய்த போலீஸாா், மண் திருட பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம், 2 லாரிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.