நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸ் சாா்பில் விருப்பமனு
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் புதன்கிழமை பெறப்பட்டது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் புதன்கிழமை பெறப்பட்டது.
காங்கிரஸ் கட்சியினரிடம் விருப்ப மனுக்களை முன்னாள் மத்திய அமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன், மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.சங்கர பாண்டியன் ஆகியோா் பெற்றனா்.
நிா்வாகிகள் அனுராதா சங்கரபாண்டியன், வழக்குரைஞா் கமலநாதன், வெள்ளைப்பாண்டியன், வாகை கணேசன், மாரியம்மாள், உமாபதி சிவன், பகவதி உதயகுமாா், அம்பிகா முத்துதுரை, குறிச்சி கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் விருப்ப மனுக்களை அளித்தனா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச்செயலா் ஏ.சொக்கலிங்ககுமாா், மாவட்ட துணைத் தலைவா் பி.என்.உதயகுமாா், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி பாலாஜி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.