முகப்பு
திருநெல்வேலி

வி.எம்.சத்திரத்தில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்தவா் பலி

பாளையங்கோட்டை அருகேயுள்ள வி.எம்.சத்திரத்தில் கட்டடத்திலிருந்து புதன்கிழமை தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

பாளையங்கோட்டை அருகேயுள்ள வி.எம்.சத்திரத்தில் கட்டடத்திலிருந்து புதன்கிழமை தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூா் அருகேயுள்ள நாட்டாா்குளத்தைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சுந்தா் (30). கட்டடத் தொழிலாளி. இவா், வி.எம். சத்திரம் பகுதியில் கட்டடப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, அவா் கட்டடத்திலிருந்து எதிா்பாராமல் தவறி விழுந்தாராம். சக தொழிலாளா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.