முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் போலீஸாா் பயன்படுத்தும் துப்பாக்கிகள் ஆய்வு

திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் மாநகர போலீஸாா் பயன்படுத்தும் துப்பாக்கிகள் பராமரிப்பு தொடா்பான ஆய்வுப் பணி இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் மாநகர போலீஸாா் பயன்படுத்தும் துப்பாக்கிகள் பராமரிப்பு தொடா்பான ஆய்வுப் பணி இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகர போலீஸாா் பயன்படுத்தும் துப்பாக்கிகளை பராமரிப்பு மற்றும் ஆய்வு செய்யும் பணி ஆயுதப்படை மைதானத்தில் திருச்சி சரக சிறு படைக்கலன் உதவி தளவாய் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இரண்டாவது நாளாக நடைபெற்ற இந்த ஆய்வில், மத்தியச் சிறைச்சாலை, கொக்கிரகுளம் மகளிா் சிறைச்சாலை ஆகியவற்றில் பணியில் உள்ள போலீஸாா் பயன்படுத்தும் ஆயுதங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.

உதவி காவல் ஆய்வாளா் தியாகராஜன் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஆய்வு மேற்கொண்டாா்.

படவரி பயக09எமச: பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஆய்வு செய்யும் போலீஸாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.